Thursday, August 09, 2012

புதிய ஆத்திசூடி

1) அச்சம் தவிர்

2) ஆண்மை தவறேல்

3) இளைத்தல் மகிழ்ச்சி

4) ஈகை திறன்

5) உடலினை உறுதி செய்

6) ஊண் மிக விரும்பு

7) ஏறுபோல் நட

8) ஒற்றுமை வலிமையாம்

9) ஓய்தல் ஒழி

10) காலம் அழியேல்

11) கீழோர்க்கு அஞ்சேல்

12) குன்றென நிமிர்ந்து நில்

13) கூடித்தொழில் செய்

14) கெடுப்பது சோர்வு

15) கேட்டினும் துணிந்து நில்

16) கொடுமையை எதிர்த்து நில்

17) சரித்திரத் தேர்ச்சி கொள்

18) சாவதற்கு அஞ்சேல்

19) சிதையா நெஞ்சு கொள்

20) சீறுவோர்ச் சீறு

21) சூரரைப் போற்று

22) செய்வது துணிந்து செய்

23) சோதிடம் தனை இகழ்

24) தாழ்ந்து நடவேல்

25) தீயோர்க்கு அஞ்சேல்

26) துன்பம் மறந்திடு

27) தூற்றுதல் ஒழி

28) தெய்வம் நீ என்று உணர்

29) தேசத்தைக் காத்தல் செய்

30) தையலை உயர்வு செய்

31) நினைப்பது முடியும்

32) நுனி அளவு செல்

33) நையப் புடை

34) பணத்தினைப் போற்றல்

35) புதியன விரும்பு

36) பூமி இழிந்திடேல்

37) பேய்களுக்கு அஞ்சேல்

38) பொய்மை இகழ்

39) போர்த்தொழில் பழகு

40) மானம் போற்று

41) மிடிமையிலே அழிந்திடேல்

42) முனையிலே முகத்து நில்

43) யாரையும் மதித்து வாழ்

44) ராஜஸம் பயில்

46) ரெளத்திரம் பழகு

47) வருவதை மகிழ்ந்து உண்

48) வான நூல் பயிற்சி கொள்

49) வீரியம் பெருக்கு

50) வெடிப்புறப் பேசு

51) வேதம் புதுமை செய்

52) வையத்தலைமை கொள்


-மகாகவி பாரதியார்

1 comment:

  1. நண்பர் சரவணன் அவர்களுக்கு,
    2007 லிருந்து சங்கப்பலகை என்ற பெயரில் வலையில் எழுதி வருகிறேன்.

    பெயர்க் குழப்பம் தவிர்க்க, உங்களது வலையின் தலைப்பை மாற்றினால் உதவியாகவும் குழப்பமற்றும் இருக்கும்.

    நன்றி.

    ReplyDelete