Thursday, April 25, 2013

தமிழ் வழி கல்வி முறையும் - மாணவர்கள் படும்பாடும்

தமிழ் வழி கல்வி முறையும் - மாணவர்கள் படும்பாடும்

இப்பதிவை தொடங்கும் முன் நான் சில கூற்றுகளை தெளிவுபடுத்த
விரும்புகிறேன். நான் தமிழுக்கோ, தமிழ்வழி கல்விமுறைக்கோ எதிரானவன்
அல்லன்.
தமிழும், தமிழ்வழி கல்விமுறையும் தமிழகத்தில் நிலைபெற்று வாழ வேண்டும்
என்று விரும்புபவன். நம் மொழி பல்லாயிரம் ஆண்டு தொன்மை வாய்ந்த இலக்கண,
இலக்கியம் நிறைந்த அற்புதமான மொழிதான்.
ஆனால், தற்பொழுதைய காலகட்டத்திற்க ஏற்ப மாறுதல்கள் தமிழில் ஏற்பட்டுள்ளதா
என்பதனை நாம் ஆராய்தல் வேண்டும். தமிழின் சிறப்புகளை மட்டும் பேசி அதன்
குறைகளை களையாமல் விட்டால் அது நம் தாய்மொழியை நாமே கொலை செய்வதற்கு
சமமாகும்.
சரி நமது தலைப்பிற்கு வருவோம்....
தமிழ்வழி கல்விமுறை என்பது அரசியல்வாதிகள் முதல் பல தமிழறிஞர்கள் வரை
பலரது குரலாக ஒலித்து இன்று பொறியியல் உட்பட பல உயர்கல்வி பாடங்களில்
அமல்படுத்தப்பட்டுவிட்டது.

ஆனால், அதன்பின் தமிழை தரப்படுத்த எவரும் முன்வரவில்லை.

1) தமிழின் உரைநடை முறை அறிவியலுக்கு உகந்ததா?

2) போதுமான கலைச்சொற்களை கொண்டுள்ளதா?

3) அப்படியே கலைச்சொற்கள் இருந்தாலும் அவை சமூகத்தில் பயன்படுத்தப்படுகின்றனவா?

என்ற எந்தவொரு கேள்விக்கும் பதிலளிக்காமல் மாணவர்கள் தலையில் தமிழை
இறக்கி வைத்துவிட்டு சென்று விட்டனர். நான் தமிழை இழிவுபடுத்தவில்லை.
அதன் குறைகளை சுட்டிக்காட்டி அவற்றை சரிசெய்ய விரும்புகிறேன். நானும்
தமிழ்வழிக்கல்வியில் பயின்றவன்தான். தாய்மொழி கல்விதான் சிறந்தது என்பதை
அறிந்தவன் தான். ஆனால் தாய்மொழி வழி கல்வியில் உள்ள குறைபாடுகளை அகற்ற
விரும்புபவன். நான் பதினொன்றாம் வகுப்பில் அறிவியல் பிரிவை எடுத்த
பொழுதுதான் தமிழ் வழிகல்வி முறையில் உள்ள மிகப்பெரிய ஓட்டை எனக்கு
தெரிந்தது.

அது தமிழின் உரைநடை அமைப்பு. நூலாசிரியர்கள் தங்கள் ஒட்டுமொத்த தமிழ்
ஞானத்தையும் பாடபுத்தகத்தில் இறக்கியிருப்பர் நான் சிறுவயதிலிருந்தே
தமிழில் பயின்றவன்தான். ஆனால் பதினொன்று மற்றும் பன்னிரென்டாம்
வகுப்புகளில் வேதியியல், இயற்பியல் போன்றவை மிகவும் குழப்பமான தமிழ்
நடையில் எழுதப்பட்டிருந்தது. அதே பாடங்களை ஆங்கிலத்தில் எளிமையாக
உருவாக்கியிருக்கின்றனர். ஆனால் தமிழில் மட்டும் தங்கள் மேதாவி தனத்தை
காட்டியுள்ளனர்.
அடுத்தது கலைச்சொற்கள் தமிழ் புத்தகங்களில் உள்ள கலைச்சொற்கள் வேறு
எங்கும் பயன்படுத்தப்படுவதே கிடையாது. எனது பார்வையில் தமிழ்வழி கல்வியை
மேம்படுத்த செய்ய வேண்டியவை:

1) தமிழ் உரைநடையை எளிமைபடுத்த வேண்டும். மரபுகவிதைகளை உடைத்தெறிந்தது
போல் மரபுவழி உரைநடை முறையையும் எளிமைப்படுத்த வேண்டும்.

2) தமிழ் கலைச்சொற்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும்.

No comments:

Post a Comment